Airplane Mode: விமானத்தில் ஆன் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் தங்களது ஸ்மார்ட்போனை Airplane Modeல் வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
ஆனால் அவ்வாறு செய்யப்படுவது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?
இதுகுறித்து விமானி ஒருவர் டிக்டொக்கில் விவரித்து பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
அதில், Airplane Modeல் போடாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பேசியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக Airplane Modeல் வைக்க சொல்லப்படுகிறது, ஸ்மார்ட்போனின் சிக்னல்கள் விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் பயண சிஸ்டம்களோடு குறுக்கிட்டு பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக மட்டும் தான்.
இதனால் பெரிய விளைவுகள் ஏற்படப்போவதில்லை என்றாலும், விமானத்தில் விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்களோடு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
Airplane Modeல் இல்லாவிட்டால் அழைப்புகள் வரும் போது ரேடியோ டவரோடு இணைக்கும் போது அது ரேடியோ அலைகளை வெளியிடுகிறது.
இதனால் விமானிகளின் ஹெட்செட்டில் கொசுக்கள் ஏற்படுத்தம் சத்தம் உண்டாகிறது, இது விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதில் சிக்கல்களை உண்டாக்கலாம்.
அதுமட்டுமல்லாது Airplane Modeயை ஆன் செய்யாவிட்டால், ஸ்மார்ட்போன் தொடர்ந்து சிக்னல்களை தேடிக்கொண்டிருக்கும். இது பற்றரியை விரைவில் தீர்ந்துபோகச் செய்துவிடும்.
எனவே Airplane Mode-யை ஆன் பாதுகாப்பு காரணங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையே!!!
