Numerology: இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பர் முதல் கோடீஸ்வர யோகம் காத்திருக்கு.. எந்த தேதி?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள்.
இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன்அவர்களை சார்ந்திருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள்.
அப்படியான பெண்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. எண் 4
12 மாதங்களில் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டெண் 4 ஆக இருக்கும். இந்த தேதியில் பிறந்தவர்கள் அடுத்த 20 நாட்கள் மங்களகரமானதாக இருக்கலாம். இவர்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன் வருமானம் மற்றும் நிதி தொடர்பான வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்களின் முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும் சிறந்த பலன் இந்த நாட்களில் கிடைக்கும்.
2. எண்-3
12 மாதங்களில் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு கூட்டெண் 3 ஆக இருக்கும். இந்த ரேடிக்ஸ் எண்ணை உடையவர்களுக்கு அடுத்து 20 நாட்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் தயக்கத்துடன் முயற்சி செய்யாமல் உங்களின் முழு கவனத்தையும் செலுத்தினால் சிறந்த பலன் இருக்கும். இந்த நாட்களில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
3. எண்-8
எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் சுட்டெண் 8 ஆக இருக்கும். அடுத்த 20 நாட்களுக்கு வேலை தேடுபவர்களின் கனவு நனவாகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறினாலும் முயற்சி எடுத்து கொண்டு இருக்க வேண்டும். முதலீட்டுடன் சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமும், நீரேற்றத்துடன் இருப்பதன் அவசியம்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).