இந்த தேதியில் பிறந்தவங்களுக்கு கடன் பிரச்சினை துரத்திக்கிட்டே இருக்கும்
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது.
ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்க்ள என்னென்ன தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எண் 3
12 மாதங்களில் 3, 12, 21 மற்றும் 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் திடீர் செலவு பழக்கங்களுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
ஆடம்பர பொருட்கள் மற்றும் தேவையற்ற அனுபவங்களில் அதிக பணம் செலவழிக்கும் வாய்ப்பு வரும். செலவுகளால் வங்கி கணக்குகள் விரைவாக காலியாகும். பிடிவாதம் கடனில் போராடும் போது உதவி அல்லது ஆலோசனையை பெறுவது கடினமானதாக இருக்கும்.
எண் 5
5, 14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும், தேவையற்ற ஆடம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார்கள். மற்றவர்களை கவரும் நோக்கில் இவர்கள் அதிகமாக செலவு செய்வார்கள்.
டிசைனர் ஆடைகள், நகைகள் மற்றும் பிற உயர் ரகப் பொருட்களுக்காக பணத்தை வீணடிப்பார்கள். இதன் விளைவுவாக அவர்களுக்கு வரும் தற்பெருமை, அவர்கள் நிதி ரீதியாக சிரமப்படுவதை ஒப்புக்கொள்வதை கடினமாக்குகிறது, கடன் மற்றும் நிதி நெருக்கடிகள் அதிகமாக இருப்பதால் மற்றவர்களிடமிருந்து எப்போதும் மறைந்திருப்பார்கள்.
எண் 6
6,15 மற்றும் 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அதிகமாக உணர்ச்சிவசபடுவார்கள். பொறுப்பற்ற செலவு பழக்கத்திற்கு வழிவகுக்கும். விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் திடீர் உணர்ச்சிக்கு ஏற்ப செயல்படும் குணம் கொண்டவர்கள், இதனால் அவர்களுக்கு கடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் அவர்களின் பன்முகத்தன்மை மற்றும் உற்சாகத்தின் மீதான அன்பு அவர்களை பயணம், பொழுதுபோக்கு மற்றும் பிற அனுபவங்களில் கவனம் செலுத்த வைக்கும். நிதி சிக்கல்கள் மற்றும் கடன் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவிப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
