வாரத்திற்கு 2 முறை போடுங்க.. கருகருன்னு அடர்த்தியாக தலைமுடி வளரும்
தலைமுடி பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் அதனை சரியாக பராமரிப்பது அவசியம்
முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்களை உணவில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அப்படி கிடைக்காவிட்டால் வெளியில் இருந்து கொடுக்கலாம்.
அதாவது எமது வீடுகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எண்ணெய் மற்றும் பேக் செய்து போட்டால் தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வெளியில் இருந்து கிடைக்கும். அத்துடன் கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும் பிரச்சனைகளை தடுக்கிறது.
அந்த வகையில், நூல் போன்று இருக்கும் தலைமுடியை காடு போன்று வளர வைக்கும் மூலிகை எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
செம்பருத்தி பூ எண்ணெய்
அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்று ஆலிவ் எண்ணெய் ஆகிய எண்ணெய்களையும் ஒன்றாக ஊற்றி கலந்து கொள்ளவும்.
அதன்பின்னர் வெந்தயத்தை எடுத்து மெதுவாக பொடித்து இந்த எண்ணெயில் சேர்ன்னவும். அதனுடன் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் காம்பு நீக்கி இலைகளை அலசி தண்ணீர் உலரும் வரை காயவிட்டு பொடியாக நறுக்கி எண்ணெய்யில் கலந்து விடவும்.
பிறகு கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டையும் சேர்த்து கலந்து விடவும். அடுத்து, செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி அதையும் எண்ணெயில் சேர்க்கவும்.
எண்ணெயில் அனைத்து பொருள்களையும் சேர்த்த பின்னர் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து, தீயில் சூடேற்றவும். 20 நிமிடங்கள் வரை சூடேறினால் போதும்.
அதிகமாக சூடேற்றும் பொழுது எண்ணெய் ஆவியாக ஆரம்பித்து விடும். சூடு தணிந்த பின்னர் எண்ணெயை வடிகட்டி பிறகு அதனுடன் எசன்ஸ் ஆயில் சேர்த்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்.
பயன்படுத்து முறை
தலைக்கு குளிப்பதற்கு முன்னர் எண்ணெய்யை தலையில் நன்றாக வைக்கவும். அதற்கு முன்னர் உச்சந்தலையை சுத்தம் செய்ய வேண்டும்.
உச்சந்தலை அழுக்குடன் இருக்கும் போது கூந்தலை சுத்தம் செய்யும் பொழுது தலைமுடி வளர்ச்சி தடைப்படும். கூந்தலில் எண்ணெய்யை தடவி பிறகு விரல்களால் நுனி வரை ஊற்றி நன்றாக மசாஜ் செய்யவும்.
சுமாராக 30 முதல் 1 மணி நேரம் வரை வைத்திருந்து கூந்தலை அலசி எடுக்கவும். டீப் கண்டிஷனிங் செய்யும் போது 2 முதல் 3 மணி நேரம் வரை வைத்திருந்து பிறகு அலசி விடலாம்.
இது போன்று வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை வரை செய்யலாம். தலைமுடி வளர்ச்சி நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
