சித்திரவதை தாங்க முடியல.. கதறியழுத நடிகையின் காணொளி பார்த்து பதறும் ரசிகர்கள்
தன்னை வீட்டை சுற்றியுள்ளவர்கள் சித்திரவதை செய்வதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கதறி அழுத காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை தனுஸ்ரீ தத்தா
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் நடிகை தனுஸ்ரீ தத்தா.
தன்னை ஏமாற்றிய காதலனை தைரியமாக தூக்கி வீசிய பெண்ணாக நடித்த தனுஸ்ரீ தத்தா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர், தமிழ் சினிமாவுக்கு வர முன்னர் ஹிந்தியில் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான “ஆஷிக் பனாயா” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சில வருடங்களுக்கு முன்னர், நடிகர் நானா படேகர் மீது மீ டூ புகார் கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
கதறியழுத்த நடிகை
இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018ல் மீ டூ புகார் சொன்னதில் இருந்து தன்னை வீட்டுக்கு அருகில் இருப்பவர் கொடுமை செய்வதாக காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
கண்ணீருடன் கதறி அழுத தனுஸ்ரீ தத்தா, “வீட்டில் வேலைச் செய்வதற்கு கூட ஆட்கள் வைக்க முடியவில்லை. ஏதாவது எடுத்து கொண்டு போய் விடுகிறார்கள். தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள். தாமதமாகிவிடும் முன் ஏதாவது செய்யுங்கள்..” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
