இந்தியாவை விட எந்தெந்த நாட்டில் தங்கம் விலை குறைவு தெரியுமா?
இந்தியாவை விட தங்கம் மலிவான விலையில் கிடைக்கும் சில நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்க நகைகள்
இந்தியாவில் தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. ஆபரணத் தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடையே அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக தமிழக பெண்களுக்கு தங்க நகை என்றால் கொள்ளை பிரியம் என்று தான் கூற வேண்டும். நகை பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விலையும் எகிற வைத்துள்ளது.
ஆனால் இந்தியாவில் மட்டும் தான் தங்கம் இவ்வாறு அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இதைவிட குறைவாகவே தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது.
அவ்வாறு இந்தியாவினை விட விலை குறைவாக எந்தெந்த நாடுகளில் தங்கம் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.
துபாய்
இந்திய மக்களிடையே துபாய் தங்கம் என்பது பிரபலமாக வருகின்றது. இதற்கு காரணம் அங்கு விலை குறைவாக இருப்பதே. துபாயில் நகைக்கடைகள், வங்கிகளில் தங்கத்தை வாங்க முடியுமாம். அங்கு தங்கம் வாங்கும் போது வரி விதிக்கப்படுவதில்லையாம். மேலும் இறக்குமதி வரியும் மிகவும் குறைவாக இருப்பதால் இங்கு மலிவான விலையில் தங்கம் கிடைக்கிறது.
சுவிட்சர்லாந்து
தங்கம் மலிவான விலையில் கிடைக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று. தங்கம் சுத்தரிப்பு துறைக்காக பெயர் பெற்ற இந்த நாட்டில் தங்கத்திற்கு குறைவான வரியே விதிக்கப்படுவதால், இந்தியாவை விட இங்கும் தங்கம் விலை மலிவாக கிடைக்கின்றது.
ஹாங்காங்
தங்கம் வாங்கும் போது எந்த விற்பனை வரியோ அல்லது வாட் வரியும் விதிக்கப்படுவதில்லை. இதனால் இந்தியாவை விட ஹாங்காங்கிலும் தங்கத்தின் விலை மலிவாக இருக்கின்றது.
சிங்கப்பூர்
சிங்கப்பூரில் தங்க நகை வாங்கும் போது குறைவான வரியே விதிக்கப்படுகிறது. இதனால் அங்கு இந்தியாவை விட குறைவான மலிவான விலையில் தங்கம் கிடைக்கிறது.
தாய்லாந்து
தாய்லாந்திலும் குறைவாக இறக்குமதி வரி தங்கத்திற்கு விதிக்கப்படுவதால், இந்தியாவை விட இங்கு தங்கத்தின் விலை குறைவாகவே இருக்கின்றது.
மலேசியா
மலேசியாவிலும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைவாகவே விதிக்கப்படுவதால், இந்தியாவை விட மலேசியாவிலும் தங்கம் விலை குறைவாகவே இருக்கின்றது.
அமெரிக்கா
அமெரிக்காவிலும் தங்கத்தின் மீதான வரிகள் குறைவாகவே விதிக்கப்படுகின்றது. அங்கும் இந்தியாவை விட தங்கத்தின் குறைவாகவே விற்கப்படுகின்றது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் தங்க சுரங்கங்கள் அதிகமாக உள்ளதால அங்கு தங்கம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்தியாவை விட குறைவான வரிகள் விதிக்கப்படுவதால் அங்கு தங்கம் விலை குறைவாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |