தண்ணீர் இல்லாமல் வாழ்க்கை ஓட்டும் உயிரினங்கள்- பலரும் அறியாத தகவல்
பொதுவாக இந்த உலகில் உயிரினங்களாக பிறந்த அனைத்திற்கு தண்ணீர் முக்கிய பங்கான்றுகின்றது.
தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் இந்த உலகில் உயிர்வாழ முடியாது. ஏனெனின் உயிர்களின் வர பிரசாதமாக தண்ணீர் பார்க்கப்படுகின்றது.
ஆனால் தண்ணீர் குடிக்காமல் வாழும் உயிரினங்கள் பூமியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அப்படியான உயிர்கள் யாவை? என்னென்ன சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றது? என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
1. ஆப்பிரிக்க யானை
ஆப்பிரிக்க யானைகள் உண்ணும் தாவரங்களிலிருந்து நீரை பெற்றும் கொள்ளும் ஆற்றல் கொண்டவை. இந்த யானைகள் புல், இலைகள், வேர்கள், பழங்கள் மற்றும் பிற தாவர பாகங்களை சாப்பிட்டு உயிர் வாழக் கூடியது.
சுமாராக 70 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ஆப்பிரிக்க யானைகள் வறண்ட காலநிலையில் வாழும் ஆப்பிரிக்க சவன்னா யானைகள் குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு தண்ணீர் இல்லாமல் வாழும்.
2. ஆஸ்திரேலிய தவளை
தேவையான போது மாத்திரம் தண்ணீர்க்குள் இறங்கி தேவையான நீரை உறிஞ்சி வைத்து கொள்ளும். இது வெப்பத்துடன் கூடிய வறண்ட நிலப்பகுதியில் வாழும். மழைக்காலத்திற்கு பின்னர் வெகுகாலம் தண்ணீர் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டும்.
3. ஒட்டகம்
பாலைவனங்களில் வாழும் ஒட்டகங்கள் பெரும்பாலும் தண்ணீர் குறைவாகவே குடிக்கின்றன. தன்னுடைய கொழுப்பான கூம்புகளில் தண்ணீர் சேமித்து நீண்ட காலம் தண்ணீர் குடிக்காமல் வாழ்க்கை நடத்தும்.
4. பாலைவன உடும்பு
உண்ணும் உணவிலுள்ள நீரையும், காற்றிலுள்ள நீரையும் உறிஞ்சிவதன் மூலம் வாழ்க்கை நடத்தும். கடந்த 1853 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த உடும்பு இனம் கலிபோர்னியாவின் மொஜாவே மற்றும் சோனோரன் பாலைவனங்களில் உயிர்வாழ்கின்றன.
5. பாலைவன ஆமை
பொதுவாக ஆமைகள் நீரிலும், நிலத்திலும் வாழும். ஆனால் நீர் இல்லாமல் ஒரு ஆமை இருக்கின்றது என்றால் அது வியப்பாக இருக்கின்றது. பாலைவன ஆமை தனது பெரிய சிறுநீர்ப்பையின் மூலம் பாலைவனத்தின் வெப்பநிலையை மாற்றும் ஆற்றல் கொண்டது.
நீரை அருந்தும் போது எதிர்காலத்திற்கு தேவையான 40 சதவீதமான நீரை உடலுக்குள் சேமித்து வைக்கின்றது. இந்த அற்புதமான திறன் இருப்பதனால் நீண்ட நாட்கள் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |