பிடிவாத குணம் கொண்ட 5 ராசிகள்... உஷாராகவே இருங்க
பொதுவாக ராசிகளைப் பொறுத்து ஒருவரின் குணாதிசியங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் அதிகமான பிடிவாத குணம் கொண்ட 5 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மிகவும் தைரியமான மற்றும் உறுதியான நபர்களாக இருக்கும் இவர்கள், ஏதாவது ஒரு முடிவு எடுத்தால் அதனை உடனே செய்துவிடுவார்கள். தங்கள் வாழ்க்கையில் எல்லாவிதமான சவால்களையும், எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். மேலும் நல்ல தலைவர்களாகவும், தங்களின் கனவை நனவாக்கும் நபர்களாகவும் இருப்பார்கள்.
ரிஷபம்
தங்களது நோக்கத்தில் உறுதியாக இருக்கும் இவர்கள், எந்தவேலை செய்ய முடிவெடுத்தாலும் அதனை முடித்துவிடுவார்கள். இவர்களின் பிடிவாத கணம் ஒரு வேலையை செய்ய வேண்டும் என்று முடிவு எடுப்பதுடன், அதற்கேற்ப செய்துவிடவும் செய்வார்கள். மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி நிற்கும் இவர்கள் நல்ல நண்பர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.
சிம்மம்
சூரியன் அதிபதியாக இருக்கும் சிம்ம ராசியினர், சூரியனைப் போன்று பிகாசிப்பார்கள். இவர்களின் தன்னம்பிக்கையால் இவர்கள் முன்னோக்கி செல்வதுடன், சில தருணங்களில் இதுவே இவர்களை பிடிவாதமாக வைக்கின்றது. தங்கள் வேலை, சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றில் பிடிவாதமாகவும் இருப்பார்கள். இவர்களின் பிடிவாதத்தினால் செய்யும் வேலை தான் இவர்களை பிரகாசிக்க தோன்றுகின்றது.
விருச்சிகம்
வலுவான உறுதிக்கு பெயர்பெற்ற இவர்கள், ஒருமுறை முன்னேறி சென்றுவிட்டால் பின்பு, பின்னோக்கி பார்ப்பதே இல்லை. இவர்களின் பிடிவாதம் பேரார்வத்தை ஏற்படுத்துவதுடன், இவர்கள் தங்களது வேலையினை விட்டு எந்த சூழ்நிலையிலும் விலகுவது இல்லை. தனது வழியை கண்டுபிடிக்கும் வரை ஓயாத இவர்கள், மனம் தளராமல் முன்னேறவும் செய்வார்கள்.
மகரம்
பிடிவாத குணத்தை கொண்டிருக்கும் இவர்கள், தங்களது இலக்குகளை நோக்கி ஓடுவதுடன், அதில் வெற்றியும் பெறும் வரை ஓய்வெடுக்கவும் மாட்டார்கள். யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாத இவர்கள் வாழ்க்கையில் உயரத்தை எட்டுவதிலும், வெற்றி தட்டித்தூக்குவதிலும் சிறந்தவர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |