இந்த 3 கனவுகளை மட்டும் யாரிடமும் சொல்லாதீங்க... அதிர்ஷ்டத்தை மிஸ் பண்ணிடுவீங்க
தூங்கும் போது மனிதர்களுக்கு கனவுகள் என்பது வருவது இயல்பான ஒன்றாகும். இந்த கனவினை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம்.
ஆனால் கனவுகளை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்றும் அது நமக்கே தீங்குவிளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.
பகலில் சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளை செயலாக்க உதவுவது போன்ற சில நன்மைகள் கனவுகளுக்கு இருக்கலாம்.
ஒவ்வொரு கனவும் நிச்சயமாக சில அர்த்தங்களைக் கொண்டுள்ள நிலையில், சில கனவுகள் எதிர்கால தகவலையும் கொடுக்கின்றது. ஆனால் கனவு அறிவியலில் இது உண்மை இல்லையாம்.
வெளியில் சொல்லக்கூடாத கனவுகள் என்ன?
வெள்ளி நிரப்பப்பட்ட பானையை கண்டால் மங்களகரமானதாகக் கருதப்படுவதுடன், வாழ்க்கையில் நல்ல நாட்கள் வருவதையும் குறிக்கின்றது. இந்த கனவு வந்தால் நீங்கள் எல்லா சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தமாம். ஆதலால் இந்த கனவை யாரிடமும் கூறக்கூடாதாம்.
மேலும் தனது சொந்த மரணத்தையோ அல்லது நெருக்கமானவர்களின் மரணத்தையோ கனவில் கண்டால், நீங்கள் பயந்து போய் மற்றவர்களிடம் கூற வேண்டாம். இந்த கனவுக்கு உங்களது வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் முடிவிற்கு வரப்போகின்றது என்று அர்த்தம். நீண்ட காலம் வாழப்போகிறீர்கள் என்று அர்த்தம். மற்றவர்களிடம் கூறினால் இதன் தாக்கம் குறையும்.
மலர் தோட்டத்தை கனவில் கண்டால், நிதி செழிப்பை அடையப் போகின்றீர்கள் என்று அர்த்தமாம். செல்வம் அதிகரிப்பதுடன், மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். இந்த கனவை மற்றவர்களிடம் கூறினால் பலன் பலிக்காது என்று அர்த்தம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |