பிக்பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்... யாரும் எதிர்பாராத அதிர்ச்சி
பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறிய போட்டியாளர் குறித்த விபரம் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், பின்பு 4 போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றனர்.
தற்போது 24 போட்டியாளர்களில் 11 போட்டியாளர்கள் உள்ள நிலையில், கடந்த நாட்களில் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்து சென்றனர்.

இதில் அனைத்து போட்டியாளர்களுக்கு அவரவர் உறவினர்கள் தங்களது அட்வைஸை கொடுத்து சென்றனர். இந்நிலையில் இந்த 11 போட்டியாளர்களில் 10 பேர் நாமினேட் ஆன நிலையில், இதில் இன்று ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
மிகவும் நன்றாக விளையாடி வந்த அமித் பார்கவ் இன்று வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித் சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நன்றாக விளையாடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
Neeya Naana: ஒவ்வொரு ராசிக்கும் 2026ம் ஆண்டு எப்படி இருக்கும்? நீயா நானாவில் உண்மையை உடைத்த ஜோதிடர்கள்
தற்போது இவர் வெளியேறியுள்ளது நியாயமில்லாத எவிக்ஷன் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் அமித் இருந்திருந்தால் கட்டாயம் டிக்கெட்டை வென்றுவிடுவார் என்பதற்காக வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அதே வேளையில் கனி வெளியேறியுள்ளதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |