காதலிக்க மறுத்த 16 வயது சிறுமி: விஷ பாட்டிலை வைத்து மிரட்டிய காதலன்! தாங்கமுடியாத சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்
காதலிக்க மறுத்த சிறுமியை நெருக்கடி கொடுத்து மனஉளைச்சலில் தற்கொலை செய்ய வைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் சின்ன பேட்டையில் வசித்து வந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார்.
இளைஞரின் தொல்லை தாங்கமுடியாத சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் பொலிசில் புகார் அளித்த நிலையில், கைது செய்யப்பட்ட பாண்டியன் பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஆனாலும் மறுபடியும் சிறுமியிடம் வந்து காதலிக்க தொந்தரவ கொடுத்துள்ளார். சம்பவத்தன்று காதலிக்க மறுத்து விட்டால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு சிறுமி மௌனமாக இருக்கவும், இல்லை நீ என்னை காதலித்தே ஆகவேண்டும். அப்படி இல்லை என்றால் நீ விஷம் குடித்து இறந்து போய்விடு என்று விஷத்தை நீட்டியிருக்கிறார்.
பாண்டியனின் தொல்லை பொறுக்காமல் மன உளைச்சலில் இருந்த சிறுமி, திடீரென்று அந்த விஷத்தை வாங்கி குடித்துள்ளார்.
பின்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி தற்போது உயிரிழந்தையடுத்து, பெ்ணணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.