படத்தில் கருவில் அழிக்கப்பட்ட குழந்தை! நடிகர் நெப்போலியனை திருமணம் செய்ய மறுத்த மனைவி
நடிகர் நெப்போலியனின் மனைவி அவரை முதலில் திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததையும், இதற்கான காரணத்தையும் நேர்கானல் ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நெப்போலியன்.
இவர் நடித்த பெரும்பாலான படங்களில் வில்லனாகவே நடித்திருந்தார். அவ்வாறு அவரது படத்தினை அவதானித்துவிட்டு தனது மனைவி தன்னை திருமணம் செய்துகொள்ள சம்பதிக்கவில்லை என்று நேர்கானல் ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ளார்.
நடிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் இருந்து வந்தார். பின்பு பிள்ளைகளின் விருப்பத்தினை ஏற்று அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் நடித்தார்.

திருமணம் செய்ய மறுத்த மனைவி
நடிகர் நெப்போலியன் எஜமான் படத்தில் வல்லவராயன் என்ற பெயரில் கொடுமையான வில்லனாக இருந்தார். அப்படத்தில் ரஜினியை பழிவாங்க மீனாவின் கருவில் இருந்த குழந்தையை அழிக்கவும் செய்தார்.
இப்படம் பயங்கர வெற்றிப்படமாகவும் அமைந்தது. இவ்வாறு பல பாராட்டுகளை பெற்ற திருமணம் செய்யவும் தயாரானார். பெண்பார்க்க சென்ற இடத்தில் இப்படத்தினை அவதானித்துவிட்டு, குழந்தையை கருவிலேயே விஷம் வைத்து கொலை செய்தவரை கல்யாணம் செய்ய மறுத்துள்ளார்.

பின்பு பெண்ணின் அப்பா படத்தில் அவ்வாறு நடித்துள்ளார். ஆனால் நிஜத்தில் நல்ல குணமாக இருக்கின்றார் என்று கூறியுள்ளார்.
அதன் பின்பு தான் மனைவி ஜெயசுதா இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பின்பு தான் காதலிக்கவும் செய்ததாக நேர்கானலில் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |