டேட்டிங் தொடர்பாக சிறுமியிடம் பேசிய அமெரிக்க அதிபர்! முகம் சுழிக்கும் காட்சி..
டேட்டிங் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிறுமியொருவருக்கு அறிவுரை வழங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இர்வின் வேலே கம்முநிட்டி கல்லூரியில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் முடிவில் அதிபருடன் புகைப்படம் எடுப்பதற்காக சிறுமியொருவர் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் சிறுமியின் தோளில் கைபோட்டு, சிறுமிக்கு வாழ்க்கையின் டேட்டிங் ஆலோசனை கொடுத்துள்ளார்.
இதில், 30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீரியசாக நடக்க மாட்டார்கள் என பைடன் தெரிவித்தார். இதனைக் கேட்ட சிறுமி, இந்த கருத்தை தாம் மனதில் வைத்து கொள்வதாக கூறிவிட்டு தயக்கத்துடன் சிரித்தார்.
சமூகவலைதளங்களில் வெளியான இந்த வீடியோ, இதுவரை 50 லட்சம் முறை பார்வையாளர்களை தொட்டுள்ளது. இதனை பார்த்த பலரும், பைடனின் கருத்தால் சிறுமி அசௌகரியமாக உணர்ந்ததாக பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பதிவை தற்போது இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
President Joe Biden grabs a young girl by the shoulder and tells her “no serious guys till your 30” as she looks back appearing uncomfortable, secret service appears to try to stop me from filming it after Biden spoke @ Irvine Valley Community College | @TPUSA @FrontlinesShow pic.twitter.com/BemRybWdBI
— Kalen D’Almeida (@fromkalen) October 15, 2022