சாக்கடை தண்ணீரில் வெற்றிலை கழுவிய வியாபாரி - வைரலாகும் காணொளி
மும்பையின் விரார் பகுதியிலிருந்து எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் காணொளி
தெருவோரத்தில் விற்கப்படும் உணவுகளில் நாம் சுத்தம் எதிர்பார்ப்பது மிகவும் சவாலான ஒரு விடயம். ஆனால் அதற்காக சாக்கடை தண்ணீரையுமா பயன்படுத்துவார்கள்.
தற்போது தெருவோர வியாபாரி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சாக்கடை நீரில் வெற்றிலைகளைக் கழுவும் வீடியோ தற்போது வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வைரல் வீடியோவில், சாலையோரத்தில் திறந்தவெளியில் பெரிய சாக்கடைக்கு செல்லும் அசுத்தமான நீரில் வெற்றிலையை ஒரு வியாபாரி கழுவுவதைக் காணலாம்.
சாக்கடைக்கு அருகில் வசதியாக அமர்ந்திருக்கும் அந்த நபர், சாக்கடைக்கு செல்லும் அசுத்தமான நீரில் வெற்றிலையை கழுவி மறுபக்கம் அடுக்கி வைப்பதையும் காணலாம்.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது உள்ளூர்வாசிகளையும், வாடிக்கையாளர்களையும் கோபப்படுத்தியது. அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |