ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பானங்கள்... எந்தெந்த நேரத்தில் குடிக்கலாம்னு தெரியுமா?
ஆரோக்கியமான பானத்தினை மக்கள் தற்போது அதிகமாக விரும்பி பருகும் நிலையில் இதனை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய பானம்
பொதுவாக இன்றைய காலத்தில் மக்கள் அதிகமான பானங்களை விரும்பி அருந்துகின்றனர். ஆனால் இவற்றினை எந்த நேரத்தில் பருகினால் ஆரோக்கியத்தினை பெற முடியும் என்பதை பலரும் தெரிந்து கொள்ளவில்லை.
நாம் தவறான நேரத்தில் பருகும் பானங்கள் சில தருணங்களில் உடல்நலத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றது. ஆகவே சரியான நேரத்தில் பானத்தினை எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது ஆகும்.

தற்போது எந்தெந்த பானத்தினை எந்தெந்த தருணத்தில் சாப்பிட வேண்டும் என்பதை விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்தெந்த நேரத்தில் சாப்பிடலாம்?
காபி: தூங்கி எழுந்து ஒரு மணி நேரத்திற்கு பின்பு காபியை குடிக்க வேண்டும். அதேபோன்று, உணவு சாப்பிட்ட உடனே காபியை குடிக்கக்கூடாது. ஏனெனில் இவை செரிமானத்தினை தாமதப்படுத்துகின்றது.
தண்ணீர்: காலை தூங்கி எழுந்தவுடன் குடிப்பது நல்ல பலனை அளிக்கின்றது.
தேநீர்: தேநீரையும் காலை மற்றும் மதிய உணவிற்கு பின்பு ஒரு மணி நேரம் கழித்து குடிப்பது சிறந்தது. ஆனால் இரவில் தூங்கும் முன்பு தேநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

இளநீர்: மாலை நேரத்தில் குடிக்காமல் காலை வேளையில் குடிப்பது மிகவும் சிறந்தது ஆகும்.
கிரீன் டீ: மதிய நேரங்களில் கிரீன் டீ-யை பருகினால் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கின்றது.
எலுமிச்சை பானம் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர்: இவற்றினை வெறும் வயிற்றில் அருந்தலாம் என்று கூறப்படுகின்றது.

பால்: இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பது உடம்பிற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
புரோட்டின் ஷேக்: உடற்பயிற்சியின் போது உடம்பிற்கு அதிகளவில் புரோட்டீன் சத்து தேவைப்படுகின்றது. ஆதலால் உடற்பயிற்சிக்கு பின்பு புரோட்டீன் ஷேக்கை எடுத்துக் கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |