இந்த உணவுகளை இரண்டு முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாதாம்! ஏன் தெரியுமா?
எந்தெந்த உணவுகளை இரண்டு முறைக்கு மேல் சூடுபடுத்தக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உணவை சூடுபடுத்துதல்
பொதுவாக நம்மில் சிலர் உணவு வீணாகக் கூடாது என்பதற்காக எஞ்சிய உணவுகளை பல நாட்கள் பிரிட்ஜில் வைத்து சூடு செய்து சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் மீண்டும் மீண்டும் சில உணவுகளை சூடு செய்து சாப்பிடுவதால், அது உங்கள் உணவை நச்சுத் தன்மையுடையதாக மாற்றலாம்.

மேலும் இது உடலுக்கு பல்வேறு தீங்கை விளைவிக்கின்றது. அந்த வகையில் இரண்டு முறைக்கு மேல் சூடு செய்து சாப்பிடுடக்கூடாத உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
அரிசி சாதம்
சமைத்த சாதத்தில் எளிதில் பாக்டீரியாக்கள் வர தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் நிலையில், இதனை இரண்டு தடவைக்கு மேல் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஏனெனில் இவை வயிற்று வலி, வாந்தி ஏற்படுவதுடன், அப்படியே சூடுசெய்து சாப்பிட வேண்டும் என்றால் சாப்பாடு செய்த இரண்டு மணி நேரத்தில் ப்ரிட்ஜில் மாற்றி வைத்து தேவைக்கு என்று அவ்வப்போது சூடு செய்து கொள்ளவும்.

கீரை
பச்சை இலை காய்கறிகளில் ஒன்றான கீரையை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடக்கூடாது. இதில் இயற்கையான நைட்ரேட் இருப்பதால் சிலருக்கு தீமையை ஏற்படுத்துகின்றது.
இதனால் கீரையை ப்ரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுசெய்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி
இதே போன்று இறைச்சியையும் சூடு செய்து சாப்பிட்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டும். இவை இயற்கையாக புரதச்சத்து கொண்டுள்ள நிலையில், செரிமான பிரச்சனைக்கு வழி வகுக்கின்றது.
இதனால் நமது தேவைக்கு மட்டும் இறைச்சியை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளவும், தேவைக்கு அதிகமாக வாங்கி ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |