இந்த 3 ராசிகளிடம் வம்பு வச்சிக்காதீங்க... வாழ்க்கையை நரகமாக்காமல் ஓயவே மாட்டார்களாம்
பொதுவாகவே ஒருவருடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, நட்பு வட்டாரம், விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் பகையை மனதில் வைத்து, நேரம் பார்த்து பழிதீர்க்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி பகைவர்களை மிகவும் மோசமாக பழிவாங்கும் குணத்தை இயல்பிலேயே கொண்டிருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான குணத்துக்கும், ரகசிய இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் தனிப்பட்ட விடயங்களை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களை காயப்படும்போது, எளிதில் மறந்துவிட மாட்டார்கள். இவர்கள் சிறிய விடயத்தையும் நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நண்பர்களாக அவ்வவு சிறப்பானவர்களோ, அதை விட பல மடங்கு எதிரியாக மோசமாக பழிவாங்கும் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகள்.
எந்த இடத்திலும் தங்களுக்கான மதிப்பையும், மரியாதையையும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இவர்ளை பகைத்துக்கொள்வது மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவர்கள் ஒரு நபரை எதிரியாக முடிவு செய்துவிட்டால், அவர்களுக்கு வாழும் போதே நரகத்தை காட்டாமல் ஓய மாட்டார்கள்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்கள் வெளிப்புறத்தில் குளிர்ச்சியாக இருந்தாலும் உள்ளே மிகவும் உணர்திறன் மிக்கவராக இருப்பார்கள்.
இவர்கள் தங்களை பற்றிய விமர்சனங்களை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டாலும், நிச்சயம் அதற்கான பதிலடியை நேரம் பார்த்து கொடுத்தே தீருவார்கள்.
இந்த ராசியினருடன் நட்பு கொண்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பார்கள். அதுவே எதிர்த்து நின்றால் இவர்களின் வாழ்க்கைக்கு முடிவு கட்டாமல் விடவே மாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |