தன் பால் ஈர்ப்பாளராக மாறிய மகன்! அவரது அம்மா என்ன செய்தார் தெரியுமா?
ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்த அம்மா மற்றும் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓரின சேர்க்கை
டெல்லி சேர்ந்த யாஸ் எனும் இளைஞரொருவர் தன்னுடைய கல்லுாரி பருவத்திலிருந்து ஆண்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.
இந்த விடயத்தை தங்களது வீட்டில் கூறினால் பிரச்சினை வரும் என்று பயந்து நீண்டநாட்களாக மறைத்து வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர் தன்னுடைய அம்மாவிடம் யாஸ் இந்த விடயம் தொடர்பாக தெளிவுப்படுத்த முயற்சித்துள்ளார். இதற்கு ஓப்புதல் தராமல் அவர்களும் மற்றைய பெற்றோர்கள் மாதிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயம் குறித்த யாஸின் மாமியின் காதிற்கு செல்ல, இந்த மாற்றத்தை இளைஞரின் பெற்றோருக்கு தெளிவுப்படுத்த முயற்சி எடுத்த போது அது பயனளிக்காமல் சென்று விட்டது.
வைரலாகும் புகைப்படம்
இதனையடுத்து அவரின் தாயார் மகனின் இந்த மாற்றத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்னர் ஓரின சேர்க்கை கொணடவர்களால் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.
இதில் யாஸிடன் அவருடைய அம்மா மீனாட்சியும் கலந்துக் கொண்டுள்ளார்.
இதனை பார்த்த மற்றையவர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள். இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ளும் போது ‘நாங்கள் எப்போதும் உன்னுடன் ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் குறித்த இளைஞரின் தாயாருக்கு வாழ்த்துக்களை பதிவேற்றி வருகிறார்கள்.