வீட்டுமுன் கட்டும் தோரணம் - பாரம்பரியம் பின்னால் இருக்கும் மறைமுக அறிவியல்
வீட்டு வாசலில் கட்டும் தோரணம் கண் திருஷ்டி என நினைத்தீர்களா? இதற்கான அறிவியல் காரணம் இது தான். பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டு வாசலில் கட்டும் தோரணம்
ஒரு கடையின் நுழைவாயிலிலோ அல்லது வாகனங்களிலோ ஒரு எலுமிச்சை மற்றும் பல மிளகாய்களை சரம் போல கட்டி தொங்க விடுவதை பாாத்திருப்போம்.
ஆனால் இதை பலரும் அலங்காரத்திற்காக என நினைத்திருப்பார்கள். சிலர் திருஷ்டிக்காக என நினைத்திருப்பார்கள்.
இந்த கண் திருஷ்டியில் தோரணத்தில் இருக்கும், எலுமிச்சை, அதன் வசீரகமான நிறத்தால், வீட்டுக்கு வருபவரின் கவனத்தை திசைதிருப்பி கண் திருஷ்டி ஆற்றலை ஈர்த்து உறிஞ்சும் சக்தியைக் கொண்டதாக நினைக்கிறார்கள்.

பச்சை மிளகாயில் உள்ள காரமும் உஷ்ணமும் எதிர்மறை சக்திகளை விலக்கி விரட்டும் பண்பைக் கொண்டது என்றும், அதில் கட்டியுள்ள கரி, கருமை நிறம், அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் தன்னில் தக்கவைத்து, வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் என நம்பிக்கை உண்டு. ஆனால் இதன் உண்மையான காரணமோ யாருக்கும் தெரியாது.
ஆனால் இந்த எலுமிச்சை மிளகாய் சரம் தொங்க விடுவதற்கு ஆன்மிக காரணமும் உள்ளது. அறிவியல் காரணமும் உள்ளது. உண்மையாக சொல்ல போனால் இதை தொங்க விடுவது நன்மை தான். எனவே பின்னணி காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

எலுமிச்சை மிளகாய் அறிவியல் காரணம்
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதன்படி, எலுமிச்சையில் முதன்மை அமிலமாக சிட்ரிக் அமிலமும், மிளகாயில் கேப்சைசினும் உள்ளது. இவை இரண்டும் சிறிய பூச்சிகளுக்கு வலுவான இயற்கை தடுப்பு மருந்துகளாகும்.
இதனால் தான் ஆரம்பத்தில் இருந்து மக்கள் வீடுகள், கடைகள் அல்லது உணவுக் கடைகளில் இருந்து ஈக்கள் மற்றும் பூச்சிகளை விலக்கி வைக்க ,இதை முன்னே கட்டி தொங்க வைக்க ஆரம்பித்தனர். இது இந்தியாவில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளில் ஒரு பூச்சி விரட்டியாக செயல்பட்டன.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |