ருத்ராட்சம் அணிவதன் அறிவியல் பின்னணி
இந்து மதத்தை பொருத்தவரையில் ருத்ராட்சம் முகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக கருதப்படுகின்றது.
ஏனெனில், ருத்ராட்சம் என்பது சிவனின் ஒரு வடிவமாகவே இந்துக்கள் கருதுகின்றார்கள். சிவ பெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்ச மரம் உருவானது என்பது நம்பிக்கை.
அதனை மதம் சார்ந்த பொருளாக பார்ப்பதை விடுத்து அறிவியல் ரீதியாக பார்ப்பதன் மூலம் இந்துக்கள் மாத்திரமன்றி ஏனையோரும் அதன் பயன்கனை அடையக் கூடியதாக இருக்கும்.
சித்தர்கள் ருத்ராட்சத்தை அணிய...
அறிவியலின் படி இயற்யையாகவே சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்க கூடிய சக்தி இருக்கின்றது, அந்தவகையில் இந்த ஆற்றல் ருத்ராட்சத்துக்கு அதிகமாக இருக்கின்றது.
இந்த ரகசியம் தெரிந்தே நமது முன்னோர்களும் சித்தர்களும் ருத்ராட்சத்தை ஒரு ஆபரணமாக அணிவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
மேலும் ருத்ராட்சம் ஒரு இயற்கை அன்டிபயோடிக் இது நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் துனைபுரிகின்றது.
அதனை நம் உடலோடு ஒட்டி இருக்கும் வண்ணம் ஆபரணமாக அணிவதன் மூலம் நம்மை நோக்கி நேர்மறை எண்ணங்கள் அதிகமாக கவரப்படும்.
இதனால் மனதில் தெளிவும் நிம்மதியான உணர்வும் கிடைக்கின்றது. ருத்திராச்சம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும்.
அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது.
குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும்.
பொதுவாக ருத்ராட்சம் சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப் புறத்தினை குளிர்விக்கும் தன்மையுடைவை. இதனை நம் உடலில் அணிவதால் தேகம் குளிர்ச்சியாகும் என கூறப் படுகிறது.
நம் துறவிகள் ஏராளமான ருத்ராட்சம் மணிகளை அணிந்தன் பின்னால் இத்தகைய அறிவியல் காரணம் மறைந்திருக்கிறது.
ருத்ராட்ஷம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். இதனை ஒரு மதம் சார்ந்த பார்க்காமல் அறிவியல் ரீதியில் சிந்தித்தால் மத வேறுபாடு இன்றி இதன் பயனை அனைவரும் பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |