2 கிலோ தங்க சங்கிலி: ரியல் தாய்கிழவியின் Exclusive பேட்டி
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் கடந்த 27 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிய திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
வயதான பாட்டியின் தோற்றத்தில் கலை அரசி என ராசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ராதிகா நடித்துள்ளார்.படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகின்றது.
முதல் நாளில் இருந்தே வசூல் வெறியாட்டம் ஆடிவரும் தாய் கிழவி 11 நாட்களில் உலகளவில் ரூ. 53 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த திரைப்படத்தில் வரும் தாய்கிழவி கதாப்பாத்திரத்தின் சொந்தக்காரியான பவுன்தாய் எமது ஊடகத்துடன் தாய்க்கிழவி படம் குறித்து பகிர்ந்துக்கொண்ட சுவாரஸ்யமான விடயங்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |