அசல் அம்மா போலவே இருக்கும் பிரபல நடிகை! அன்சீன் புகைப்படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளின் ஒருவரான நடிகை வரலட்சுமி, தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஹீரோயின்
நடிகை வரலட்சுமி, 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மகளாவார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அம்மாவின் புகைப்படம்
தொடர்ந்து இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படமொன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில் பார்பதற்கு அசல் அவருடைய அம்மா போல் இருக்கிறார் வரலட்சுமி.
இந்த புகைப்படத்தை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.