2025-ல் கூகுளில் மக்கள் அதிகம் தேடிய வார்த்தை என்ன தெரியுமா?
2025ஆம் ஆண்டின் ஆரம்பதில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்சியும் உச்சம் பெற்றது என்றால் மிகையாகாது. இதனால் உலகம் முழுவதும் இணையப் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2025ஆம் ஆண்டில் கூகுளில் மக்கள் அதிக அளவில் தேடியது என்ன என்பது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவை
தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, அரசியல், விளையாட்டு, திரைப்படம், வானிலை, சமூகச் சம்பவங்கள் போன்ற பல துறைகள் சார்ந்த சொற்கள் அதிகமாக 2025 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக you tube அடையாளப்படுத்தப்படுகின்றது. உலகளவில் மாதத்ததுக்கு 1.38 பில்லியல் தேடல்களை you tube என்ற சொல் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தை chatgpt மற்றும் face book பெற்றுள்ளது. அதனை தொடந்துகூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் “AI Tools” முக்கிய இடம் வகிக்கின்றது.
Gemini, Claude போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகள் வேகமாக வளர்ந்து வருவதால், பொதுமக்கள் முதல் தொழில்முறை நிபுணர்கள் வரை AI குறித்து அதிகமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அதற்கு அடுத்தப்படியாக இந்த ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகளில் கிரிக்கெட் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆசிய கோப்பை தொடர்பான விஷயங்களை மக்கள் அதிக அளவில் தேடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி, ப்ரோ கபடி லீக் ஆகியவை முக்கிய இடங்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |