இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இயற்கை வழிகள் இதோ
தற்காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து அதிகரித்து வருகிறது.
உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயைத் தவிர்க்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.

தவறான உணவு முறை, உட்கார்ந்த வாழ்க்கை முறை உள்ளது, வாழ்க்கை முறை பழக்கங்கள் உள்ளிட்ட பல காரணிகள் நீரிழிவு நோய் தாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நீரிழிவு நோயை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரிழிவு என்றால் என்ன?
தசைகள், திசுக்கள் மற்றும் மூளையில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆற்றல் மூலமாக மனித உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு கணையத்தால் வெளியிடப்படும் ‘இன்சுலின்’ என்ற ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால் நீரிழிவு நோயாளிகளின் கணையத்தால் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவில் இல்லை, அல்லது உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும் தன்மையை கொண்டிருக்கும்.

இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன, இது பொதுவாக உயர் இரத்த சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. அதாவது ரத்ததில் சர்கரை அளவு அதிகமாக இருப்பதை குறிக்கும்.
இதனால் சர்க்கரை செல்களுக்குள் சென்று ஆற்றலாக மாறுவது தடுக்கப்படுகிறது. இது கண்கள், சிறுநீரகங்கள், நரம்புகள் மற்றும் இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும், மேலும் நீரிழிவு வகை 1, வகை 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு என மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

அதாவது இன்சுலின் பற்றாக்குறை என்பது கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யாதது இது வகை 1 நீரிழிவு. உடல் இன்சுலினைச் சரியாகப் பயன்படுத்தாதது இன்சுலின் எதிர்ப்பு எனப்படுகின்றது அது வகை 2 நீரிழிவு. மேலும் கர்ப்பகால நீரிழிவு என்பது கர்ப்ப காலத்தில் மட்டும் ஏற்பட்டு பின்னர் இயல்பு நிலைக்கு வருவது.
இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாமா?

1.உணவு முறை
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துடுத்துவதில் உணவு முறை முக்கிய இடம் வகிக்கின்றது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.
கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக உடைக்கப்படுகின்றன, இது இரத்த சர்க்கரையை நேரடியாக பாதிக்கிறது. கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை குறைப்பதன் மூலம் ரத்த ரர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
அதே நேரம் நார்ச்சத்து நிறைந்த உணவுளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை நார்ச்சத்து மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ப்ரோக்கோலி, பெர்ரி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளைத் அதிகமாக எடுத்துக்கொள்வதால் இயற்கையாகவே உடலில் சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படும்.

குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். கிளைசெமிக் குறியீடு என்பது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்பதைக் குறிக்கிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.ஓட்ஸ், பருப்பு வகைகள் (பீன்ஸ், பயறு), முழு தானியங்கள், பெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
போதுமான தண்ணீர்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்கள் சிறுநீர் வழியாக அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.
நீரிழப்பு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும், எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். குறிப்பாக சர்க்கரை பானங்களைத் தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர் அல்லது மூலிகை தேநீர்களைத் தேர்வு செய்யவது சிறப்பு.

2.உடற்பயிற்சி
உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது ரத்த சர்க்கரையை சீராக பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. உடல் தசைகள் குளுக்கோஸை ஆற்றலுக்காகப் பயன்படுத்த உடற்பயிற்சி உதவுகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான-தீவிர உடற்பயிற்சியை பின்பற்றுவது விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற செயல்பாடுகள் ரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்துகின்றது.

மன அழுத்தத்தை குறைத்தல்
முக்கியமாக மன அழுத்த ஹார்மோன்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன எனவே, ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைப் பயிற்சி செய்துவது மன அழுத்தை மாத்திரமன்றி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் பெரிதும் துணை புரிகின்றது.

தரமான தூக்கம்
போதுமான அளவு தூக்கமின்மை உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனை சீர்குலைத்து, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உயர் இரத்த சர்க்கரையை ஏற்படுத்தும்.எனவே இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், தரமான தூக்கம் இன்றியமையாதது. குறைந்தபட்சம் நாளொன்றுன்கு 7 தொடக்கம் 8 மணிநேர தூக்கம் அவசியம்.
இது போன்ற முக்கிய விடயங்களில் அக்கறை செலுத்துவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்ப்பாட்டில் வைத்துக்கொள்ள முயும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |