லட்சுமியை வீட்டில் குடியமர்த்தும் வில்வ இலையின் நீங்கள் அறியாத மகத்துவம்!
பொதுவாக பூஜைகளுக்கு வில்வம் இலைகள் பயன்படுத்துவார்கள். இந்த இலைகள் பயன்படுத்தி பூஜைகள் செய்வதால் வருவவைகள் அனைத்தும் நன்மையாகவே வந்து சேரும்.
முன்னோர்கள் இந்த இலைகள் காய்ந்துப் போனாலும் பயன்படுத்துவார்கள். ஏனெனில் வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்ற ஐதீகம்.
அந்த வகையில் வில்வம் இலை, மரம் என்பவற்றின் சிறப்புக்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
வில்வம் இலை மகத்துவம்
வில்வ இலை புராதான காலம் தொட்டு பயன்படுத்துவதற்கு சிறந்த சான்றாக சிவபுராணம் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதன் சிறப்புக்களை இந்த காவியம் அழகாக எடுத்துரைத்துள்ளது.
இந்த காவியத்தில் வில்வம் மரம் ஒன்று, ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று அதன் சிறப்பை விளக்கியுள்ளனர்.
ஒரு வில்வ மரத்தை வீட்டில் வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும். அத்தகைய தெய்வீக மகத்துவங்கள் நிறைந்தது வில்வ மரம்.
முக்கிய தோஷங்களில் ஒன்றான நிர்மால்ய தோஷம் இந்த மரத்திற்கு கிடையாது. இதனால் இந்த எத்தனை நாட்கள் வேணுன்னாலும் பயன்படுத்தலாம்.
மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரி பூஜைகளுக்கு பயன்படுத்தக் கூடாது. இது வில்வ இலைகளுக்கே உரிய தனிச் சிறப்பு.
அதுமட்டுமன்றி இந்த இலைகள் சிவபெருமானுக்கு உகந்த இலையாகவும் பார்க்கப்படுகிறது. இதிலுள்ள இலைகளை பறிப்பதற்கு சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே: அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே
இதன் பொருள்
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்