Wow... ஆஸ்கர் விருது பெற்ற ‘The Little Mermaid’ டிரெய்லர் வெளியானது- தெறிக்க விடும் ரசிகர்கள்
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ டிரெய்லர் மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 3 பிரிவுகளில் படங்கள் தேர்வானது. சிறந்த பாடலுக்காக ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டார்கள்.
‘தி லிட்டில் மெர்மெய்ட்’ டிரெய்லர்
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற ’தி லிட்டில் மெர்மெய்ட்’ டிரெய்லர் மற்றும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ வரும் மே 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் டிரைலர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.