பெரிய ஜமீன் பரம்பரை இவரு.. மோசமாக தாக்கி பேசிய பார்வதி- உடனே மன்னிப்பு கேட்ட இர்பான்
யூடியூபர் இர்பான் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு உதவுகிறேன் என செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
யூடியூப்பர் இர்பான்
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூப்பர்களில் ஒருவர் இர்பான்.
இவர் பிரபலமான உணவகங்களுக்கு சென்று உணவுகளை சுவைத்து பார்த்து அதன் தரத்தை வீடியோவாக பதிவு விட்டு பிரபலமானவர். இதற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இர்பான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு அழகான மகள் ஒருவரும் இருக்கிறார்.
தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இர்பான் அவரின் காணொளிகள் மூலம் மக்களுக்கு பரிசளிப்பது, உதவி செய்வது என பல சமூக வேலைகளையும் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், இர்பான் மற்றும் அவரது மனைவி இருவரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு பணம் மற்றும் ஆடைகளை காருக்குள் அமர்ந்து கொண்டு வழங்கினார்கள்.
இதனை காணொளியாக பதிவு செய்து அவர்களின் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
அதில், சிலர் காருக்குள் கை விட்டு இர்பான் மனைவி கையில் இருக்கும் பொதியை பறிக்க முற்படுகிறார்கள். இதனை பார்த்துக் கொண்டிருந்த இர்பான் அவர்களை திட்டி விட்டு பொதியை கொடுக்காமல் நகர்கிறார்.
தாக்கி பேசிய பார்வதி
இந்த காணொளி பார்த்த இணையவாசிகள், இர்பான் மற்றும் அவரின் மனைவியை மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
அதில், பார்வதி பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அதாவது, “ இவரு பெரிய ஜமீன் பரம்பரை, காருக்குள்ள உட்கார்ந்து கொண்டுதான் இல்லாத மக்களுக்கு சேவை செய்வார். தனது மனைவியை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என நினைப்பவர், அவரது மனைவியை வீட்டிலேயே விட்டுவிட்டு வர வேண்டியதுதானே!.
இது போன்ற சமூக நடவடிக்கைகளுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கவே கூடாது. மக்களே! ரத்தன் டாடா தனது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை பெருமளவில் இல்லாத ஏழைகளுக்கு கொடுத்துள்ளார்...” என கடுமையாக தாக்கி பேசினார்.
இர்பான் கொடுத்த பதில்
இப்படி பல விமர்சனங்கள் வந்துக் கொண்டிருந்த போது இர்பான் நேற்றைய தினம் பகிர்ந்த காணொளியில், “உதவிச் செய்வதற்கு தான் நாங்கள் அங்கு சென்றோம். அப்போது அவர்கள் நடந்துக் கொண்ட விதம் தான் என்னை அப்படி பேச வைத்தது.. இனி வரும் காலங்களில் உதவி செய்ய போகும் பொழுது முறையாக திட்டமிட்டு செல்கிறோம்..” என பதில் கொடுத்திருக்கிறார்.
இந்த செய்தி இர்பான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |