நல்ல பாம்பை அடிக்க போய் வீடே வெடித்து சிதறிய சம்பவம்! 5 பேரின் நிலை என்ன?
வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிக்க சென்று வீடே எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நாங்கபட்டி, சித்தகுடிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(62).
இவர் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதனிடையே கடந்த நாளின் போது இவர் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது.
பாம்பை அடிக்க முயன்ற போது, அந்த பாம்பு வீட்டில் இருந்த மின் இணைப்பு பெட்டிக்குள் புகுந்துள்ளது.
அப்போது நல்ல பாம்பை அடித்தபோது, எதிர்பாராத விதமாக மின் இணைப்பு பெட்டியில் இருந்து தீப்பிடித்து மின்சார வயர்கள் எரிய தொடங்கியது.

இதனால், வீட்டில் இருந்த பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களும் வெடித்து சிதறியுள்ளது. தொடர்ந்து இந்த விபத்தில் சிக்கிய சுப்பிரமணி அவரது மகன்
மகேஸ்வரன் (23), கலியபெருமாள் மகன் ராமகிருஷ்ணன் (40) பவுன்துரை மனைவி விஜயராணி (28) பவுன்ராஜ் மகன் மோகன்ராஜ் (5) ஆகிய 5-பேரும் படுகாயம் அடைந்தனர்.
பின், அக்கப்பக்கத்தினர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மகேஸ்வரன் உடல் நிலை மட்டும் அபாய கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.