ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் உள்ள வியப்பூட்டும் கடிகாரம்! எப்படி இயங்குகிறது தெரியுமா?
ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் காணப்படும் புதுமையான மின்னணு கடிகாரம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?
ஒரு மனிதன் உள்ளே சிக்கிக் கொண்டது போல தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கடிகாரம் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வியப்பூட்டும் கடிகாரம்
ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம் (AMS) ஒரு பெரிய முனையமாக உள்ளது மற்றும் ஐரோப்பாவின் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாறாகவும் இது அறியப்படுகின்றது.
இங்கு, பயணிகளின் வசதிக்காக பல்வேறு இடங்களில் கடிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஷிபோல் விமான நிலையத்தில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு எவ்வளவு தூரம் உள்ளது போன்ற தகவல்களையும் அங்குள்ள கடிகாரங்களில் பார்க்ககூடியதாக இருப்பது அதன் சிறப்பம்சமாகும்.
மேலும், ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையத்தில் ஒரு புதுமையான மின்னணு கடிகாரமும் உள்ளது. அது ஒரு மனிதனால் இயக்கப்படும் கடிகாரமாகும், அதை வெளியில் இருந்து பார்க்கும் போது, ஒரு மனிதன் உள்ளே சிக்கிக் கொண்டது போல் தோன்றும்.
ஒவ்வொரு நிமிடமும் அவர் கடிகார முட்களை அழித்து மீண்டும் வரைவது போல தோன்றும். அவர் ஒரு நாளில் பல முறை நேரம் மாற்றுவது போல தோன்றும், இது ஒரு கண்கவர் காட்சி.
உண்மையில் இந்த கடிகாரம் ஒரு மனிதன் உள்ளே சிக்கிக் கொண்டது போல தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது உண்மையில் ஒரு கலைஞரால் பதிவுசெய்யப்பட்ட காணொளி. இந்த கடிகாரம், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும் ஒரு சுவாரஸ்யமான மற்றும் நினைவில் கொள்ளத்தக்க அனுபவத்தை இது வழங்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |