பூனைக்குட்டியை காப்பாற்ற நாய் செய்த தரமான செயல்! டிரெண்டிங் வீடியோ
கால்வாயில் விழுந்த பூனைக்குட்டியை நாயொன்று காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூகவலைத்தளம் பக்கம் சென்றாலே நாய் மற்றும் பூனைகளின் வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, பகிர்ந்தவுடன் அதன் க்யூட்டான செயல்களால் டிரெண்டாகியும்விடும்.
நம் கவலைகளை எல்லாம் மறந்து மனதார சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் 5 அறிவு ஜீவன்களின் செயல்கள் எப்போதுமே நம்மை ஈர்த்து விடும்.
அந்தவகையில் சமீபத்தில் பகிரப்பட்ட வீடியோ பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
Dogs என்ற கேப்ஷனுடன் ஸ்மைலி போட்டு Buitengebieden என்ற டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பலகையை வாயில் கவ்விக்கொண்டு வரும் நாய் கால்வாயின் பாதையில் போடுகிறது, காரணம் பூனைக்குட்டி ஒன்று கால்வாயை கடக்க முடியாமல் நடுவில் சிக்கித் தவிக்கிறது.
பூனைக்குட்டிக்கு உதவும் வகையில் நாயின் இந்த செயல் பலரையும் வியக்கவைத்துவிட்டது என்றே கூறலாம்.
வீடியோ வெளியான 24 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது.
இதோ அந்த வீடியோ,
Dogs.. ? pic.twitter.com/7xE53tm4ox
— Buitengebieden (@buitengebieden) November 13, 2022