உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாய்... வைரலாகும் வீடியோ....!
உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உரிமையாளரின் உயிரை காப்பாற்றிய நாய்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில்,நாயை கூட்டிக்கொண்டு வந்த உரிமையாளர் ஒரு மரத்தின் கீழ் நின்று செல்போனை நோண்டிக்கொண்டிருந்தார். அப்போது, மேலே பார்த்த நாய் சட்டென குறைக்க ஆரம்பித்தது.
அப்போது, உடனே அந்த நாய் உரிமையாளரை தள்ள முயற்சி செய்தது. ஆனால், அந்த நபர் அதை கவனிக்கவில்லை. மீண்டும் அந்த நாய் வேகமாக அவரை தள்ளிவிட்டது.
நாய் தள்ளிய உடன் சற்று தள்ளிச்சென்ற அவர் திரும்பிப்பார்த்தபோது மரத்தின் மேலே இருந்து ஒரு பெரிய கிளை கீழே விழுந்தது. இதைப் பார்த்த அந்த உரிமையாளர் வாயடைத்து அப்படியே நின்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... என்ன ஒரு அறிவு.. என்று வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
??? pic.twitter.com/6RGYUcsRTk
— security footage (@security_footag) March 12, 2023