முதுகு வலி ஏற்படுவதற்கான காரணமும், அறிகுறிகளும்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இன்று பெரும்பாலான நபர்களை வாட்டி வதைக்கும் முதுகு வலிக்கான காரணமும், அறிகுறிகளையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதுகு வலி
பொதுவாக முதுகு வலிக்கு பல காரணங்கள் உள்ளது. முதுகுத் தசை அல்லது தசைநார் பிடிப்புகள், அதிக எடை தூக்குவது, சரியாக இல்லாத படுக்கையில் தூங்குவது என்பதாகும்.
முதுகுத் தண்டுவடத்தில் உள்ள வட்டுகளில் ஏற்படும் வீக்கம், அல்லது அவை விலகி, உள்ளிருக்கும் மென்மையான பகுதி நரம்புகளை அழுத்துவதாலும் கடுமையான வலி ஏற்படும்.
கீல்வாத நோய்கள், முதுகுத்தண்டுவட எலும்புகள் சுருங்குவது, ஆஸ்டியோபோரோசிஸ், மற்றும் அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் போன்ற அழற்சி நோய்களும் முதுகு வலிக்குக் காரணமாகலாம்.
அறிகுறி என்ன?
முதுகில் வலி, குனிந்து நிமிர முடியாமல் போவது, கால்களில் மதமதப்பு, கால் தசைகளில் பலவீனம், காலையில் முதுகெலும்பில் ஏற்படும் விறைப்பு, நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ அல்லது நின்றாலோ வலி அதிகரிப்பது, எரிச்சல் அல்லது குத்துவது போன்ற உணர்வு போன்றவை முதுகு வலியின் முக்கிய அறிகுறிகள்.
சில சமயங்களில் வலி முதுகில் தொடங்கி கால் வரை பரவலாம். குனிவது, கனமான பொருட்களைத் தூக்குவது, நடப்பது போன்ற செயல்கள் வலியை இன்னும் மோசமாக்கலாம்.
தீர்வு என்ன?
மிதமான ஏரோபிக் பயிற்சிகள் முதுகுத்தசைகளை வலுப்படுத்தி, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும். நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவையும் பலன் தரும்.
வயிற்று மற்றும் முதுகுத்தசைப் பயிற்சிகள், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது ஆகியவை முதுகுவலி பிரச்சனையில் இருந்து விடுபட வழிகள் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
