உயிருள்ளவரை மறக்கமாட்டேன்! மருத்துவமனையிலிருந்து தமிழ் நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ
பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலம், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி கூறி வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது.
80, 90களில் வில்லனாக அதிரடி காட்டியவர் நடிகர் பொன்னம்பலம், தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், மருத்துவமனை கட்டணத்தை கட்ட சிரமப்பட்டு வந்துள்ளார், இதையறிந்த தெலுங்கு நடிகரான சிரஞ்சீவி 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள பொன்னம்பலம், சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ரொம்ப நன்றி அண்ணா. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் கொடுத்ததை ரொம்பவும் உதவியாக இருந்தது.
உயிருள்ளவரை மறக்கமாட்டேன். அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி” என்று உருக்கமுடன் பேசியுள்ளார்.