பிரம்மாண்டமாக நடைபெறும் சித்திரை திருவிழா தொடக்கம் - குவியும் பக்தர்கள்
பிரபலமான கோவிலான தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் நடைப்பெற்றது. தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிக பிரமாண்டமாக நடைப்பெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த ஆண்டுக்கான 18 நாட்கள் நடைபெறும் திருவிழா இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
குவியும் பக்தர்கள்

மேலும், தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோவில் அரண்மனை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 88 கோவில்களுள் ஒன்றாகும். தொடர்ந்து, இன்று மாலை சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.
விழாவில் தினமும் காலையில் பல்லக்கும், மாலையில் வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக தடைப்பட்டிருந்த முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி நடைபெறுகிறது.