தாமிரபரணி பானுவின் மகளை பார்த்ததுண்டா? அப்படியே அம்மாவை போலவே இருக்காங்க
விஷாலுடன் தமிழ் திரைப்படமான தாமிரபரணி திரைப்படத்தில் நடிகையாக நடித்த பானுவின் மகள் தற்போது சினிமாவில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தாமிரபரணி பானு
இவர் தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டு வெளிவந்த தாமிரபரணி எனும் படத்தின் மூலம் தமிழ் தரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்த நிலையில் இவர் 2015 ஆம் ஆண்டு டோமி என்பவரை திருமணம் செய்தார். நடிகை பானுவுக்கு தற்போது கியாரா எனும் ஐந்து வயது பெண் குழந்தை இருக்கிறது.
இவரின் குழந்தை கியாரா பத்மகுமார் இயக்கத்தில் உருவாகும் 'பத்தாம் வளவு' என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாக இருக்கிறார்.
இதை நடிகை பானு சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
தற்போது நிறையய குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து காண்டிருக்கும் வேளையில் தற்போது பானுவின் மகளும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |