அதீத நம்பிக்கை! ரூ.12 லட்சத்தை எடுத்திருக்கலாம்- தாமரைக்காக வருந்தும் பிக்பாஸ் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடைசி எவிக்ஷனாக வெளியேறியிருக்கிறார் தாமரை செல்வி.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடைசி வார எவிக்ஷன் பட்டியலில் பிரியங்கா, ராஜீ, பாவனி, தாமரை என நால்வர் இடம்பெற்ற நிலையில், தாமரை வெளியேறி இருக்கிறார்.
அமீர், நிரூப் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக ஏற்கனவே தேர்வாகிவிட்டனர், பிரியங்காவும் தேர்வாகி விட்டதாக கமல் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக தாமரை வெளியேற்றப்பட்டுள்ளார், கடைசி வாரத்தில் சிபி 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

அவர் கடைசியாக வரும்போதுகூட, தாமரையிடம் நீங்கள் செல்கிறீர்களா? என கேட்டுக்கொண்டே இருந்தார்.
எப்படியும் இறுதிச்சுற்றுக்கு வந்துவிடுவோம், முதல் அல்லது இரண்டாம் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தாமரை இருந்ததால், பணம் வேண்டாம் என கூற சிபி 12 லட்ச ரூபாயுடன் வெளியேறினார்.
ஆனால் தாமரையின் ஆசையோ நிறைவேறாமல் போய்விட்டது, 12 லட்சமாவது கிடைத்திருக்குமே என ஆதங்கப்படுகின்றனர் அவரது ரசிகர்கள்.
எது எப்படியாக இருந்தாலும் கடைசி வரை நின்று போராடிய தாமரையின் குணத்துக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது!!!
