தாமரையின் கணவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கப்போகிறதா? நள்ளிரவில் அரங்கேறிய கூத்து
சிம்பு தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை ஜுலியிடம் இரவு அரங்கேற்றிய கொமடி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகின்றது.
நாமினேஷனில் பிக்பாஸ் அதிரடி
பிக்பாஸ் அல்டிமேட்டின் கடைசி நாமினேஷன் நேற்றைய தினம் அரங்கேறியது. தற்போது பாலா, தாமரை, நிரூப், அபிராமி, ரம்யா, ஜுலி, சுருதி என ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நேற்று சுருதி, அபிராமி தவிர மற்ற ஐந்து பேரும் நாமினேஷனுக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், கடைசியாக பிக்பாஸ் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார்.
ஆம் இந்த வாரம் பிக்பாஸின் கடைசி நாமினேஷன் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனுக்கு செல்வதாக அறிவித்தார்.
பப்பாளியின் பக்கவிளைவுகள் என்ன? யாரெல்லாம் அதிகமாக சாப்பிடக்கூடாது
நள்ளிரவில் தாமரையின் லூட்டி
நள்ளிரவில் தாமரை ஜுலியின் காலில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றார். பக்கத்து படுக்கையில் பாலாவும் படுத்திருக்க ஜுலியை தனது கணவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள கோருகின்றார்.
ஒரு கட்டத்தில் தனது கணவரின் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்த்து தாமரை சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்.
இறுதியில் இவர்கள் எடுத்த முடிவு என்ன என்பதை காணொளியில் காணலாம்.