உதவ வந்த பிரபல நடிகர்கள்: தனது தாய் தந்தைக்கு யாரும் உதவ வேண்டாம்! தாமரை அதிரடி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தாமரை செல்வி தனது குடும்பத்திற்கு யாரும் உதவ வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை வந்தவர் தான் நாடக கலைஞர் தாமரை.
பிக்பாஸில் கலந்து கொண்டு ஓரிரு வாரத்தில் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி வரை சென்று தனது இடத்தினை தக்க வைத்தார்.
பிக்பாஸில் இவர் வெளியேறுவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட பணப்பெட்டி டாஸ்கில் கூட இவர் பணத்தினை எடுக்காமல் வெளியே வந்தது ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சமீபத்தில் தாமரையின் தாய் தந்தை மற்றும் சகோதரர் மற்றும் சகோதரிகளின் கஷ்டத்தினையும், அவர்கள் வசிக்கும் வீட்டின் நிலையும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பேச்சுப்பொருளாக மாறியது.
இதனை அவதானித்த பலரும் தாமரை செல்வியின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
இதில் நடிகர் கமல், ஜேம்ஸ் வசந்தன், எஸ்.பி.பி சரண், சூர்யா இவர்களும் உதவ முன்வந்துள்ளனர், ஆனால் தாமரை இவர்களின் உதவியினை பெற மறுத்துள்ளார்.
இதற்கு காரணம், தனது உழைப்பினால் தாய் தந்தைக்கு வீடு கட்டிக் கொடுத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.
மேலும் தனக்கு உதவ நினைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு நன்றி என்றும், உங்களது உள்ளத்தில் இடம் கிடைத்ததே தனக்கு போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இதனால் தன்னை தனிதைப்படுத்திக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அல்டிமேட்டில் ஏழாவது போட்டியாளராக அனிதா சம்பத் கலந்து கொள்வதாக ப்ரொமோ வெளியாகியுள்ளது.