பெண்கள் கோபத்தில் தாலியை கழற்றி எறிவது தீமையா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
கோபத்தில் பெண்கள் தாலியை கழற்றி எறிவது அபச குணமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம.
மாங்கல்யம்
இந்து சாஸ்திரத்தில் முக்கியமாக திருமணமான பெண்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் தாலி புனிதமாக பார்க்கப்படுகின்றது. மாங்கல்யத்திற்கு தினமும் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்யம் பலம் நீடிப்பதாக ஐதீகம் உள்ளது.
இவ்வாறு புனிதமாக பார்க்கப்படும் திருமாங்கல்யத்தினை பெண்கள் ஒருபோதும் தூக்கி எறிந்து தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.
பெண்கள் பூமாதேவியை போன்று பொறுமையானவர்கள் என்று குறிப்பிடப்படும் நிலையில், தங்களது நியாயத்தை வேறு வகையில் பெற வேண்டுமே தவிர, மாங்கல்யத்தை தூக்கி வீசி கோபத்தை காட்டக்கூடாது.
தாலியை தூக்கி எறியலாமா?
தாலி கட்டிய கணவர் உயிருடன் இருக்கும் பொழுது அவர் கட்டிய மாங்கல்யத்தை எரிந்தால், அவர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்திற்கே தோஷம் ஏற்படுமாம்.
ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அதிபதியானவர் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது எட்டாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலும் பெண்கள் இதுபோன்ற செயலை செய்வதற்கு தூண்டுவதாக ஜோதிடம் கூறுகின்றது.
மேலும் ஜாதகத்தில் எட்டு, ஏழு, குடும்பஸ்தானம் ஆகிய இரண்டும் சரியான இடத்தில் அமையவில்லை எனில் குடும்பத்தில் தம்பதிகளுக்குள் சண்டை ஏற்பட்டு தாலியை கழற்றும் நிலை ஏற்படும் என்றும் பெண்கள் இதற்கு இடம் கொடுக்காமல் தங்களை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.
சிலரின் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் தருணத்திலும் அதற்கான பரிகாரத்தை செய்யவில்லை எனில் இவ்வாறு ஏற்படுமாம். பழைய தாலியை கழற்றி உண்டியலில் போட்டுவிட்டு புதிய தாலியை கணவர் கையால் அணிந்து கொள்ள வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |