காலில் விழுந்த ரசிகையை கட்டியணைத்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்! வைரல் புகைப்படங்கள்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ரனர். இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய், அவர்களை நேரில் சந்தித்தார்.
விஜய்
தமிழ் திரையுலகின் சிறந்த முன்னணி நடிகரான விஜய் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். இதனை அடுத்து சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி, விஷச்சாராய விவகாரம் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை, விஷச்சாராயம் குடித்தோரில் 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்தார்.இந்த பிரச்சனை தொடங்கியதை அடுத்து நேற்று திரை பிரபலங்கள் உள்பட பலர் தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்தனார்.
அதில், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவர் விஜய்யும் ஒருவர். கள்ளக்குறிச்சிக்கு சென்ற நடிகர் விஜய், அங்குள்ள மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்டவர்களையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது, ஒரு பெண் நடிகர் விஜய்யின் காலில் விழப்போக, அவர் கையை பிடித்து தடுத்து நிறுத்திய விஜய் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |