தக்காளி சட்னியில் இந்த ஒரு பொருளையும் சேர்த்து செய்து பாருங்க... சுவை அட்டகாசமாக இருக்கும்
பொதுவாகவே இட்லி தோசைக்கு தொட்டுக்க அனைவரினதும் சிறந்த தெரிவு தக்காளி சட்னி தான். ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான தக்காளி சட்னி தான் செய்து சாப்பிட்டு வருகின்றீர்களா?
சற்று வித்தியாசமாக தக்காளி சட்னியில் இதை சேர்த்து சாப்பிட்டு பாருங்க. அந்தவகையில் தக்காளியுடன் புதினா சேர்த்து எப்படி சுவையான தக்காளி சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - 4
பெரிய தக்காளி - 2
புதினா - 2 கைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.பின்பு தககாளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 2 கைப்பிடி புதினாவை சேர்த்து 1 நிமிடம் வரை நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
ஆறியதும் வதக்கிய பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்தால் மணமணக்கும் சுவையில் கெட்டியான தக்காளி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |