தாய்லாந்தின் வியக்க வைக்கும் நீரின் மீது ஒரு கிராமம்
மனிதர்களுக்கு எப்பவுமே தண்ணீர் மீது ஒரு தனி பிரியம் உண்டு. அந்த வகையில், நீரின் மீது அமைந்துள்ள ஒரு தனித்துவமான கிராமமும் இங்கு இருக்க கூடிய மக்களின் வரலாறு இன்றும் பெரிய உதாரணமாகவே இருக்கிறது. இங்கு வசிக்கக்கூடியவர்கள் பெரும்பாலானவர்கள் மீனவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் மீன் பிடித்து அதனைக் கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்துகிறார்கள். இப்போது நீரின் மீது எப்படி இத்தனை வீடுகள் கட்டப்பட்டன என்று நாம் ஆச்சரியப்படலாம்.
அதாவது தெற்கு தாய்லாந்தில் உள்ள பாங் காங் வளைகுடாவில் ஆழமற்ற மற்றும் அமைதியான நீரின் காரணமாக மீனவர்கள் நீரின் மீது வலுவான தூண்களைக் கொண்டு அமைத்து அதன் மீது வீடுகளை கட்டி இருக்கிறார்கள்.

தற்பொழுது அந்த மிதக்கும் கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 1500 க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்தோனேசியாவை பூர்விக்கமாகக் கொண்டவர்கள். இவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே கடலைக் கடந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த கால அமைப்புகளை பொறுத்து தாய்லாந்தின் சட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டினர் நிலம் வாங்க அனுமதிக்கப்படவில்லை. இந்த சட்டத்தின் காரணமாகவே தோபாபுவும் அவருடைய நண்பர்களும் கடலில் தூண்களை கட்டி நிலத்தில் ஆக்கிரமித்து தங்களுடைய வீடுகளை கட்டி இருக்கிறார்கள்.
பிறகு காலம் செல்ல செல்ல தலைமுறையினர் மாறி இந்த சிறிய கிராமம் ஒரு செழிப்பான மற்றும் தன்னிறைவு பெற்ற ஒரு கிராமமாக உருவாகியது. இன்று இந்த தனித்துவமான கிராமத்தில் குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் பிரம்மாண்டமான மசூதி ஒரு சுகாதார மையம் சிறு கடைகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான உணவகம் ஆகியவை இருக்கிறது.
மேலும், இங்குள்ள மிதக்கும் கால்பந்து மைதானமும் உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கும் ரசிக்கும் அளவிற்கு மாறி உள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய தொழிலாக மீன்பிடிப்பது என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்வேகத்தை வழங்கி இருக்கிறது.

இன்றைய காலகட்டங்களில் அந்த பகுதியில் மக்கள் தொகையில் பாதி பேர் சுற்றுலா சேவைகளுடன் தொடர்புடையவர்களாகவும், சுமார் 40 சதவீத மக்கள் இன்றும் கடலில் மீன் பிடித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்துபவர்கள் ஆகவும் இருக்கிறார்கள்.
காலம் கடந்து தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும் இந்த சமூகம் அவர்களுடைய பழங்கால கலாச்சாரத்தையும் பாரம்பரியங்களையும் வலிமையுடன் பாதுகாத்து வருகிறார்கள். இங்கு இருக்கக்கூடிய காட்சி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வேறுபட்ட உலகத்தையும் அனுபவத்தையும் ஒரு அமைதியான உணர்வையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.