Weight Loss Journey-ல் இருக்கிறீர்களா? அப்போ இந்த Aloe Vera பானம் தான் பெஸ்ட் சாய்ஸ்!
உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உணவு முறையில் மாற்றங்களை மேற்கொண்டு வருபவர்கள், ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பானங்களைத் தங்களது அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியம்.
அந்த வகையில் Aloe Vera, Chia seeds, எலுமிச்சை மற்றும் புதினா ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எளிய பானம் புத்துணர்ச்சியூட்டும் ஒரு சிறந்த தேர்வாகவும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு துணைப்புரியும் ஒரு பானமாகவும் இருப்பதே இதன் சிறப்பு.

இந்த பானத்தைத் தயாரிக்க அதிக பொருட்களோ, அதிக நேரமோ தேவையில்லை. வீட்டிலேயே எளிதாகத் தயாரித்துக்கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்
Food-grade Aloe Vera gel – சிறிதளவு
எலுமிச்சை – ½
Chia seeds 1 தேக்கரண்டி
புதினா இலைகள் – சில
தண்ணீர் – 1 கிளாஸ்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரில் தேவையான அளவு Food-grade Aloe Vera gel-ஐ சேர்க்கவும். அதனுடன் Chia seeds, அரை எலுமிச்சையின் சாறு மற்றும் சில புதினா இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துக்கொள்ள வேண்டும்.
Chia seeds சிறிது நேரம் ஊறிய பின்னர் பருகினால் அதன் தன்மை மென்மையாக இருக்கும். விருப்பத்திற்கேற்ப குளிர்ச்சியாகவும் இதனைப் பருகலாம்.
நன்மைகள்
இந்தப் பானத்தில் சேர்க்கப்படும் Chia seeds-ல் நார்ச்சத்து (fibre) உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் வயிறு நிறைவாக இருப்பதை உணரச் செய்யும். இதனால் அடிக்கடி உணவு அல்லது சிற்றுண்டி எடுத்துக்கொள்ளும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
எலுமிச்சை Vitamin C-க்கான ஒரு நல்ல உணவு மூலமாகும். அதேவேளை, புதினா இந்தப் பானத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சியான சுவையை வழங்குகிறது.தண்ணீர் சேர்க்கப்படுவதால் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை இது கொடுக்கும்.
குறிப்பாக இந்தப் பானத்தைத் தயாரிக்கும்போது கூடுதல் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் (processed foods) பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது இன்றியமையாதது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |