குச்சி ஐஸுக்குள் குடியிருந்த விஷபாம்பு! ஆசையாக வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் பாரில் விஷப் பாம்பு ஒன்று சிக்கியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது சமூக ஊடக பயனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தாய்லாந்தின் பாக் தோவைச் சேர்ந்த ரேபன் நக்லெங்பூன், இந்த கொடூரமான சம்பவத்தின் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த நபர் அங்குள்ள வண்டிக்கடை ஒன்றில் ப்ளாக் பீன் குச்சி ஐஸை வாங்கியுள்ளார். அதன் மேல் பகுதி உருகியபோது அதற்குள் பாம்புக்குட்டி ஒன்றின் தலை தெரியவே அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து ஐஸ் உருகியபோது அந்த பாம்பு முழுவதுமாக ஐஸுக்கும் உறைந்து இருந்தது தெரிய வந்துள்ளது.
அதை அவர் புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேசான விஷம் கொண்ட தங்க மரப் பாம்பு என்று சந்தேகிக்கப்படும் அந்தப் பாம்பு, பிரபலமான தாய் இனிப்பு வகையான கருப்பு பீன் ஐஸ்கிரீம் பாரில் உறைந்துள்ளது.
பொதுவாக, தங்க மரப் பாம்புகள் இப்பகுதியில் சராசரியாக 130 செ.மீ நீளம் வரை காணப்படுகின்றன. இருப்பினும், அந்த ஐஸ்கிரீமில் இருந்த பாம்பு தோராயமாக 20-40 செ.மீ நீளம் கொண்டதாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |