4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்! வினோத சம்பவம்
தாய்லாந்தில் 4 வயதான இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
திருமணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில கலாசாரங்களில் திருமணம் செய்வதால் சாப விமோசனம் கிடைப்பதாகவும், அது ஒரு பரிகாரமாகவும் பார்க்கப்படுகிறது.
இந்து மத கலாசாரத்தில் கூட சில இடங்களில் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிகவுகின்றர். இது போன்ற பல்வேறு விசித்திரமான நடைமுறைகள் திருமணத்தை வைத்து இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், தற்போது தாய்லாந்து நாட்டில் 4 வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் நடந்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த குழந்தைகள் இரண்டும் அண்ணன் தங்கையாக பிறந்த இரட்டை குழந்தைகளாம். இவர்கள் இருவருக்கும் சொந்த பந்தங்கள் இணைந்து திருமணம் நடத்திவைத்துள்ளனர். இவர்கள் முன் பிறவியில் காதலர்களாக இருந்ததாக தாய்லாந்தில் உள்ள புத்த மதத்தில் நம்பப்படுகின்றது.
ஆண் - பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்காவிட்டால் அது கெட்ட சகுணமாகவும் பார்க்கப்படுகின்றது.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்களுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது நாடுகளை கடந்து இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Four-year-old twins in Thailand were symbolically married in a lavish traditional ceremony to bring good luck and ward off misfortune, in accordance with long-held Thai Buddhists’ beliefs. pic.twitter.com/5NXvj28Nvt
— China Daily (@ChinaDaily) July 4, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |