தை பிறந்தாச்சு..வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள்
பொதுவாக மார்க்கழி முடிந்து தை பிறந்து விட்டால் சுப காரியங்களுக்கு பஞ்சமே இருக்காது.
அதிலும் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் கடவுள் வழிபாட்டிற்கு சிறந்த நாள் எனக் கூறப்படுகின்றது.
இது போன்ற நல்ல நாட்களில் ஆன்மீக சார்ந்த விடயங்களில் ஈடுபடுவது எமக்கு நன்மை கொடுக்கும் என சமயம் சார்ந்த தலைவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் குடும்பத்தில் எப்போதும் சுபிட்சம் பெற வேண்டும் என்றால் பெண்கள் என்னென்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
1. பொதுவாக பெண்கள் அம்மன் உருவானவர்கள். தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கோயில் சென்று அம்மனை வழிபடுவதால் அம்மனின் அருள் பாதி பெண்களுக்கு கிடைத்து விடுகின்றது.
அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து கோயில் செல்பவர்கள் கை நிறைய குங்குமம் வாங்கி கொடுத்தால் இன்னும் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும்.
இப்படி கொடுத்து அர்ச்சனை செய்யும் குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து கொள்வதால் அம்மனின் அருள் தினமும் உங்களோடு இருக்கும். பெண்களுக்கு எதிராக வரும் எதிர்மறையான சக்தியை இந்த குங்குமம் தள்ளி வைக்கிறது.
2. உங்கள் வீடுகளுக்கு பக்கத்தில் பசுமாடுகள் இருக்கின்றது என்றால் அதற்கு அகத்திக் கீரை, வெல்லம், பச்சரிசி, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி தானமாக கொடுங்கள். நீங்கள் கொடுப்பதை விட வீட்டிலுள்ள குழந்தைகள் கொடுப்பது இன்னும் நல்லது.
3. வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் பால் பாயாசம், பசு நெய், பசும்பால், முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்த்து சுவையான நிவேதியத்தை படைக்க வேண்டும். இப்படி வழிபடுவதால் குடும்பத்தில் அடிக்கடி வரும் பணம் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |