மனைவி மீது புகார் கொடுத்த பாலாஜி! பிக்பாஸ் வீட்டில் பெண் போட்டியாளருக்கு கொடுத்த பரிசு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இது கடைசி வாரம் என்பதால் வெளியே சென்ற போட்டியாளர்கள் மறுபடியும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர்.
பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் உள்ளே சென்றனர். அதன்பின்பு சாண்டி மற்றும் தீனா இருவரும் உள்ளே சில தினங்கள் மட்டும் இருந்து கொமடி செய்து மக்களை மகிழ்வித்தனர்.
தற்போது ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி என ஆறு போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீ்ட்டிற்குள் இருக்கின்றனர். கமல் இந்நிகழ்ச்சியின் சில வாரங்களிலேயே வெளியேறினார். அதன்பின்பு சிம்பு கமலுக்கு பதிலாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
அனிதா பெட்டியில் நிரூப் வைத்து அனுப்பிய பரிசு! இவ்வளவு விலையா?
மீண்டும் உள்ளே வந்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் கடைசி வாரம் என்பதால் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இதில் நேற்றைய தினத்தில் ஷாரிக் மற்றும் அனிதா வந்த நிலையில் இன்று பாலாஜி மற்றும் அபிநய் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் பார்த்து குஷியாகிய போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். வெளியே பிரச்சினைகள் பல இருந்தும் உள்ளே வந்த பாலாஜி தாமரைக்கு பரிசு ஒன்றினை வாங்கி வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.