சிறப்பு பூஜையில் 15 வயது சிறுமிக்கு நடந்த சித்ரவதை: 65 வயது பூசாரிக்கு கிடைத்த தண்டனை
சிறப்பு பூஜை என்ற பெயரில் 15 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சாமியாரை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் மாசாணமுத்து. இவர் அங்குள்ள சுடலை மாடன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் 35 வயது பெண் ஒருவர் தனது குடும்ப கஷ்டத்தினைக் கூறி பரிகாரம் கேட்டுள்ளார். அதற்கு ராமேஸ்வரம் சென்று பூஜை செய்ய வேண்டும் என்று கூறி தனது 15 வயது மகளுடன் பூசாரியையும் அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் சென்றுள்ளார்.
ராமேஸ்வரம் சென்ற அவர்கள், தனியறையில் சிறப்பு பூஜை செய்வதாகக் கோரி அவரை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சாமியார் மாசாணமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கு விசாரணையில் நீதிபதி சாகும்வரை சிறையில் அடைக்கவும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.