பெண் போட்டியாளரின் உடலை வர்ணித்த ஆண் போட்டியாளர்... நாக அர்ஜுனா எடுத்த சரியான முடிவு
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரின் உடலை வர்ணித்த ஆண் போட்டியாளரை தொகுப்பாளர் நாக அர்ஜுனா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
தமிழில் பிக்பாஸ் சீசன் 7 ஆரம்பித்து சென்று கொண்டிருக்கும் நிலையில், தெலுங்கிலும் சீசன் 7 சென்று கொண்டிருக்கின்றது. தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியினை நாக அர்ஜுனா தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதே போன்று தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு வினுஷாவின் உடம்பை நிக்ஷன் மோசமாக வர்ணித்து கொச்சையாக பேசியு்ளளார்.
இதனை வினுஷா வெளியேறிய பின்பு அதனை கடுமையாக எச்சரித்துள்ளார். இதே போன்று தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஆண் போட்டியாளர் பெண் போட்டியாளரை அவரது முன்பே உடம்பின் அமைப்பை வர்ணித்துள்ளார்.
இதனை வார கடைசியில் நாக அர்ஜுனா விடயத்தை அந்நபரிடம் கேள்வி கேட்டதுடன், சரியா தவறா என்றும் கோபமாக பேசி அவருக்கு குறும்படத்தையம் போட்டு காண்பித்துள்ளார்.
Host na ipadi irukanum #KamalHaasan sir should learn from #NagarjunaAkkineni #BiggBossTamil7 #BiggBoss7Tamil #BiggBoss7 #BiggBossTamilSeason7 pic.twitter.com/rvQrcBxJvP
— Sekar ? (@itzSekar) November 14, 2023
மற்ற போட்டியாளர்கள் அந்த பேச்சுக்கு ஆதரவா எதிர்ப்பா என விசாரித்து, சம்மந்தப்பட்ட அந்த பெண் போட்டியாளரிடமும் பேசி, அந்த ஆண் போட்டியாளரை கண்டித்துள்ளார்.
இதே போன்று தமிழ் பிக் பாஸை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் செய்யாமல் போனது எதற்காக? என்ற காரசாரமாக கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் வினுஷாவும் குரல் கொடுத்தும் இந்த பிரச்சினையை குறித்து கேட்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாக அர்ஜுனா அந்த விஷயத்தை எப்படி கையாண்டாரோ அதேபோல உலகநாயகனும் பேசியிருந்தால் சரியாக இருந்திருக்கும் எனவும், அப்படி செய்யாதது அவருக்கு எதிராக திரும்பி இருப்பதாகவும் பல வித கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |