பிக் பாஸ் வீட்டில் நடிகைக்கு வந்த கொடூர காய்ச்சல் - இனியும் போட்டியாளராக இருப்பாரா?
தெலுங்கு பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் சென்ற போட்டியாளர் சின்னத்திரை நடிகை ஆயிஷா டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தெலுங்கு பிக் பாஸ்
தமிழில் தற்போது பிக்பாஸ் எப்படி நடைபெறுகிறதோ அதை போல தெலுங்கு மற்றம் பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு தான இருக்கிறது.
அப்படி நடிகர் நாக அர்ச்சுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஆஹா ஓஹோ என கொண்டாடப்பட்டு வருகின்றது.

இப்படி இருக்கும்போது, தெலுங்கு பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் சென்ற போட்டியாளர் சின்னத்திரை நடிகை ஆயிஷா. இவர் சின்னத்ிரை அதாவது சீரியல்கள் மூலம் மக்களிடையே பிரபலமானவர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பின் சத்யா சீரியலில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென நிரப்பி வைத்துள்ளார்.
தற்போது தெலுங்கு பிக் பாஸில் வைல்டு கார்டு என்றியாக களமிறங்கிய ஆயிஷா குறுகிய நாட்களிலேயே பிக் பாஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இப்படி இருக்க கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் சோர்வாக காணப்பட்டார், ஆயிஷா. அவருக்கு சாதாரண காய்ச்சல் தான், சரியாகிவிடும் என்று நினைத்தார்கள் ரசிகர்கள்.
ஆனால் சோதித்துப் பார்த்ததில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெளிவாக தெரிந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது மட்டும் இல்லாமல் அவர் ஏற்கனவே வீட்டில் சக போட்டியாளரிடம் அவர் வாழ்க்கை பற்றி பேசிய விடயங்களும் ரசிகர்களிடம் ஒரு வருத்ததை கொடுத்துள்ளது.

தற்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என்பதால் ஆயிஷா தொடர்ந்து ஆட்டத்தில் இருப்பாரா? இல்லை ஆட்டத்தில் இருந்து வெளியேறி, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவாரா என்ற கேள்வியில் ரசிகர்கர்கள் உள்ளார்கள். பலர் விரைவில் மீண்டு வாருங்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
Aysha has always been unstoppable in chasing her dreams, but she’s feeling emotionally low as she’s down with typhoid and dengue. Get well soon, Aysha, your strength will shine again!🌸💪#Aysha #AyshathZeenathBeevi#BiggBossTelugu9 #BiggBoss9Telugu#biggboss pic.twitter.com/FdewD8SWyc
— Aysha (@Aysha7_official) October 25, 2025
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |